ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில்
யாருக்கு யாரென்பது தெரியாது
எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது
என்று எந்த இடத்தில் வசிப்போம்
எங்கே வாழ்வின் மகிழ்வறியோம்
புலன்களின் போக்கறியோம்
வளங்களின் பொருளறியோம்
இயற்கையின் வலியறியோம்
ஆராய்ச்சியின் இலக்கறியோம்
அடுத்த நிமிட நடப்பறியோம்
பிரபஞ்ச எல்லையறியோம்
எண்ணங்களின் ஆழமறியோம்
ரகசியங்களின் ரகசியமறியோம்
இதுதானே வாழ்வில் இனிப்பானது!
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment