போருக்கு அவளிடம் எத்தனை ஆயுதம்!
வில்லாய் வளைந்த புருவங்கள்,
வாளாய் கூரிய மைவிழிகள்,
மூக்கின் நுனியில் விடைப்பு,
சிவந்த இதழ்களில் துடிப்பு,
உடல் நெடுக ஓர் விறைப்பு,
கொல்லாமல் கொல்லும் மௌனம்,
வெடிக்கும் எரிமலை இவளோ?
வியூகத்தில் சிக்கிய அபிமன்யுவானேன்,
துளைக்கும் அம்புகள் பெய்திடும்,
தப்பிக்கும் வழியும் கண்டிலேன்,
பிழையென்ன செய்தேன் புரிந்திலன்,
பேசிப் பயனும் இருந்திடாது,
பேசாது பிணக்கும் தீராது,
ஊடல் என்பது நரகந்தானே,
கூடல் இனிக்க வழியுந்தானே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment