சிற்றெறும்பு ஊர்வதினால்
கல்லும் தேய்வதுண்டு
சிறு துளியும் சேர்வதினால்
வெள்ளம் வதுமுண்டு
சிற்றுளியும் செதுக்குவதால்
பாறையும் சிலையாகுமே
சிற்றடியை பதித்துத்தான்
நீள் பயணம் நிகழுமே
சிறு பொறியும் பற்றித்தான்
பெருந்தீயும் மூளுமே
சிறு விதையும் வெடித்துத்தான்
பெருமரமும் வளருமே
சிறு சாவி ஒன்றுதான்
பெரிய கதவை திறக்குமே
சிறிய துவக்கம் ஒன்றிலே
பெரும்புரட்சி வெடிக்குமே
சின்னச் சின்ன யத்தனங்கள்
உறுதியான அடித்தளங்கள்
உன்னதமான மாளிகைகள்
கட்டிடலாம் வாருங்கள்
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment