கூறத்தான் வார்த்தைகள் போதாது
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
மாறாத மறக்காத பற்று அது
கொஞ்சமும் குறையாத பாசம் அது
நிலையான நிறைவான நட்பு அது
தடையின்றி பிரவகிக்கும் ஊற்றது
கணமும் கவனம் கலையா காவலது
துடிப்பாக ஓடி வந்து நிற்கையிலே
வெறித்தனமாய் கொஞ்சுகையிலே
அறிவோடு கண்கள் பார்க்கையிலே
ஆவலாய் காத்திருக்கும் பாவத்திலே
வாலை ஆட்டும் வேகத்திலே
திருப்பி ஆட்டி மகிழ
வாலில்லாதது குறையே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment