ஒன்றும் ஒன்றும் இரண்டென்பது பாலபாட கணக்கு,
ஒன்றும் ஒன்றும் மூன்றாவது வாழ்க்கைப் பாட கணக்கு,
தமிழை அலங்கரிக்கும் அணிகலன்களின் கணக்கு
இரண்டும், நாலும் அடங்கும் பதினெண்கீழ்கணக்கு,
பூச்யமும், ஒன்றும் மட்டுமே மின்னணு யந்திரக் கணக்கு,
பாவமும், புண்ணியமும் சித்ரகுப்தன் எழுதும் கணக்கு,
பிணக்கின்றி வாழ்வது தெளிவாய் இருப்பவன் கணக்கு,
புரியாதோர் போட்டு குழப்பித் திரிவது தப்புக் கணக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment