Wednesday, March 17, 2010

பொறுத்திருப்போமோ

லேசா விடலாமோ இதை
போகக்கூடாத இப்பாதை
புலியைப்பார்த்து பூனை
சூடுபோட்டால் வரி விழுமா
வலியோடு வடுவாகுமா
யானையைப்போல் பூனை
தின்றால் உடல் வளருமா
வயிறு வெடித்துப் போகுமா
ஹாலிவுட் தரத்திற்கு திரையுலகை
அழைத்துச் செல்வதாகச் சொல்லி
இழுத்து செல்வது பாதாளத்திற்கு
தரமறியா கலைச் சேவை
பொறுப்பில்லா பொருளாசை
பிஞ்சு நெஞ்சில் நஞ்சை புகட்டிட
வளரும் கால்களை முடமாக்கிட
நாளைய நாட்டை கோணலாக்கிட
நல்லதோர் வீணையை நலம் கெட
புழுதியில் எரிந்திட பார்த்திருப்போமோ
பிள்ளைகள் சீரழிய அனுமதிப்போமோ
பிழைகள் பெருக பொறுத்திருப்போமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community