ஒவியம் என்றா சொன்னாய்?
விற்றுவிட மாட்டாயே?
கவிதை என்றா சொன்னாய்?
டீக்கடை திரைப்படப்பாடலா?
சிலை என்றா சொன்னாய்?
வேலை வாங்க மாட்டாயோ?
உருப்போட்டு பேசுகிறாய்
உள்ளத்தை தொலைத்துவிட்டாய்
என்னைப்பார்க்கும் போதே
கண்ணை எங்கே ஓட்டுகிறாய்?
சுண்டல் வாங்கி தின்றுவிட்டு
காசை கொடுக்கச் சொல்கிறாய்
அள்ளிக்கொள்ள அலைகிறாய்
நாளை எங்கு செல்லுவாய்?
காந்தர்வம் வேண்டாம் பையா
பரிசம் போட உறவோடு வா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment