வினோதம்தான் உண்மைகள் வெளிப்படும் விதம்
காராக்கிருக இருள் அகன்று ஒளி புகுந்தால்
கண்கள் கூசி மூடாமல் என்ன செய்யும்
புதிய ஒளிக்கு பழகும் வரை திக்குமுக்காடல்
காய்ந்து வரண்ட மண்ணில் வீழும் நீர்த்துளி
காணாமல் போகுமே தாகம் தீரும் வரை
மூச்சடக்கி கிடந்தபின்னே வீசும் தென்றல்
முதல் நொடிகளில் திணறல் தந்திடுமே
விடுதலை அடைந்த கால்கள் வெறிகொண்டு
ஓடுமோ பந்தயக்குதிரையாய் தலைதெறிக்க
மாட்டுத்தொழுவில் அடைந்து கிடந்தவளை
அவிழ்த்து விட்டதிலே கூண்டுக்கிளிக்கு
சுதந்திரம் கிடைத்ததிலே கண்மண் தெரியாத
ஆனந்தம் அதுவே தந்ததே ஒரு போதை
எதிர் கடைசிக்கு ஓடும் கடிகார பெண்டுலம்
ஊசலாடி ஓடி ஓய்ந்து நடுநிலை காணுமே
புதுவெள்ளம் கரையுடைத்து செல்லும் போது
சேதாரம் இல்லாமல் போவதில்லையே
நிவாரணப்பணிதன்னை துவங்குவோம்
நன்னாளில் நங்கையர் துலங்குவோம்
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment