கண்ணே! கண்ணின் மணியே! மாங்கனியே!
நான் அடைந்த பாக்கியமே! பெரும்பேறே!
எனை மொய்க்கும் உன் கருவண்டு கண்கள்
காந்தம்தானோ, கனிந்த திராட்சையோ?
என் முகத்தை அழுத்தும் உன் கன்னங்கள்
மத்தால் கடைந்த புது வெண்ணெய்யோ?
என் கழுத்தை கட்டியிழுக்கும் உன் கைகள்
எனை கட்டிப்போடும் சங்கிலி தானன்றோ?
குயிலாய், குழலாய் கூப்பிடும் உன் குரல்
எனை அருகே வரவழைக்கும் ஏவலன்றோ?
உன் பொக்கை வாய் சிங்காரச் சிரிப்பிலே
உலகை ஆட்டி வைக்கிறாய் சர்வாதிகாரியே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment