ஆராதிக்கிறேன் என்பான் ஆண்மகன்
அள்ளிச் சொறிவான் பேரன்பினை
சொல்லில் தேனைத் தடவுவான்
சொக்கும் வாக்குகள் வழங்குவான்
சின்னச் சின்ன சேவைகள் செய்வான்
சிறையெடுத்துச் செல்லத் துடிப்பான்
ஊரை மறந்தேன் உறவை துறந்தேன்
உனக்காக உயிரைக் கொடுப்பேன்
அத்தனை அழகான பொய்களையும்
அசங்காமல் போற்றிடு பெண்ணே
திருநாளை அழைத்து வரச்சொல்
மங்கல நாணை பூட்டிக்கொள்
குழந்தையாகவே இருந்திடுவான்
குழம்பாமல் உன் மடி கொடு
காடு வரை ஆதரவாய் கை கொடு
காலத்தோடு காமம் கரைந்தபின்னும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment