தென்றலாய் நடந்து வந்தாய்
மனதில் வீசியது புயல்
குளிர்ந்த பார்வை வீசினாய்
உள்ளே வெடித்தது எரிமலை
அன்பாய் அழகாய் பேசினாய்
அண்டம் மீண்டும் சிதறியது
அவசரமாய் ஏனடி ஓடினாய்?
ஆவியைத் தொட்ட பாவையே!
இன்னும் என்னுள் இனிக்கிறதே
இருவாச்சி போல் மணக்கிறதே
தரையில் கால் பாவ மறுக்கிறதே
விண்ணில் மனம் பறக்கிறதே
இந்தக் கணத்தை, என்னுணர்வை
பத்திரமாய் பொத்திக் காத்திட
பரவசமாய் பிரித்துப் பார்த்திட
பதித்து வைக்கிறேன் இவ்வரிகளிலே.
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment