உண்மை என்றும் உள்ளே ஒளிந்திருக்கும்
உரித்துத் தின்ன இனிக்கும் பலாச்சுளையாய்
புள்ளி போல் செய்த தவறு வருடங்கள்
தள்ளி பூதாகரமாய் வளர்ந்துவிடுமே
கள்ளிச்செடி ஒன்றினைப் போலவே
முள்ளாய் கிழித்து ரணமாய் ஆக்குமே
பள்ளிப்பருவ ராமனும் விளையாட்டாய்
எள்ளி நகைத்தான் மந்தரை கூனலை
அள்ளிக் கொண்டான் அத்தனை இடரை
சுள்ளியில் பற்றியெரியும் கானகத்து
கொள்ளியாய் நிகழ்ந்தது பாரத யுத்தம்
கிள்ளிவிட்டது பாஞ்சாலி சிரிப்பொலி
புள்ளினம் கூவும் காலை செய்த வினை
வெள்ளி முளைக்கும் வேளை விடியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment