உன்னை நீ அறிவதெங்ஙனம்?
அங்க அடையாளங்களாலா?
அன்னை தந்தை வைத்த பெயராலா?
உறவுகள் அழைக்கும் பதவிப்பெயராலா,
துணைவி, தாய், சகோதரி, பாட்டியென்றா?
கற்ற கல்வியாலா பெற்ற பட்டங்களாலா?
பழியும் பாராட்டும் காட்டும் கண்ணாடியிலா?
திரியின் எண்ணையாய் தூண்டும் நட்பினாலா?
ஒட்டியும் எதிர்த்தும் பறக்கும் வாதங்களாலா?
சிந்தனை உரைகல்லான இம்மன்றாத்தாலா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment