Saturday, March 20, 2010

பருவமறிதல்

மாங்கன்று ஒன்று அதற்குள் பூத்ததுவே
கூசாமல் பறித்தெறிந்தான் தோட்டக்காரன்
அவசரமாய் பூத்த பூக்களையே அறிவுடனே-
வயதுக்கு வராமல் பூத்துவிடுதல் நல்லதில்லை
அவனறிவான் களையெடுக்கும் கலையோடு
வெயில் தேடும் செடியெது நீர் கேட்கும் மரமெது
நிழல் வேண்டும் கொடியெது காலத்தே இலையை
கிளையை கொய்து கவாத்து செய்தவன் போற்றும்
பாங்கிலொரு பாடமுண்டு வாழ்வெனும் சோலைக்கும்
பருவம் முந்தி பூத்து வந்த பிஞ்சு வெம்பும் கனியாகாது
கனியின்றி விதையின்றி விருத்தியின்றி பொருளேது
காய்ந்துதான் போகலாமோ கற்பகச் சோலையிது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community