வோட்டுத்தான் போடுறாங்க அழகான பொண்ணுக்கு
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு தெளிவாத்தானே
விவரமான பொண்ணுங்க பொளந்துதான் கட்டுறாங்க
வேணும் பெண்ணுரிமைன்னு சத்தமா முழங்குறாங்க
அடிச்சதுக்கொன்னு பிடிச்சதுக்கொன்னு சேலை-
அது அந்தக்காலம் என்னால வாங்க முடியாததான்னு
முகவாய்கட்டையை இடிக்கிறா தோளிலே இன்னிக்கு
அடிக்கிற கை அணைக்க காத்திருந்த பத்தாம்பசலி
அனுப்பி வைக்கிறா விவாகரத்து பத்திரத்த உடனடியா
அடங்கிக் கிடக்க சொல்லுறதா அவ நினைக்கிறா
அப்பாவி ஆம்பள அடி மனசு ஆசைய அறியாத பாவி மக
சிலுத்துகிட்டு நிக்குறா சண்டைகோழியா மாறிவிட்டா
முந்தானையில கண்ணத்துடைக்க ஏங்கற குழந்தைய
காலால எட்டி உதைக்கிறா எட்டி நடை போட்டு
எங்கியோ வெகு தூரம் போறா கூட யாரும் வேணாமா
என்னத்த சொல்லுறது தனியாளா நிக்கவா இப்பொறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment