Tuesday, March 16, 2010

சூத்திரம்

வேண்டும் என்ற வேட்கை இருந்தால்
பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யை
பத்திரமாய் வெளிக்கொணரலாம்
பாலை பதமாய் காய்ச்சி ஆற விட்டு
ஏடெடுத்து உரை விட்டு புளித்த பின்னே
மத்தெடுத்து கடைகையில் திரளுமே
மெத்தென்ற நல்ல வெண்ணெய்யுமே
பாத்திரத்தில் அதையெடுத்து
பக்குவமாய் அடுப்பில் உருக்கிடவே
பொன்னிறத்தில் கமகமவென நெய்-
இல்லறத்தின் நெய் மணக்க
இணக்கமும் இன்பமும் கைகூட
கொஞ்சம் கவனமாய் மெனக்கெட
பழகிவிட்டால் கவலையில்லை.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community