Saturday, March 20, 2010

ராணி

இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல-
ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணென்பது:
ஓரடிக்கு மேல் நகர ஏலாத அரசனுக்கு
ஆனை சேனை குதிரை சிப்பாய் மந்திரியுண்டு
அத்தனை பேர் தனி சக்தியும் தான் கொண்டவளாய்
எட்டு திசையிலும் எத்தனை எட்டு வேண்டுமானாலும்
எடுத்து வைத்து அரசன் வீழாமல் காத்திடுவாள்
அந்த சதுரங்க ராணி மனையாட்சியும் அவளுக்கே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community