Wednesday, March 17, 2010

ஐந்து வரியிலே

1.வானத்தை நிலவுக்கு பட்டா போட்டதாரு?
கானத்தை குயிலுக்கு கற்றுத் தந்ததாரு?
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் தீட்டியதாரு?
மா,பலா,வாழையில் தேனைத் தடவியதாரு?
றாம் அறிவாம் அற்புதத்தை அளித்ததாரு?

2.தேனீக்கு யாரும் ஈமெயில் அனுப்புவதில்லை
பூக்கள் மலர்ந்து விட்டனவென்று
எறும்புக்கு யாரும் உளவு சொல்வதில்லை
உணவு இருக்குமிடத்தைப் பற்றி
வாய்ப்பைக் காண மனிதன் ஏன் கற்கவில்லை?

3.கொல்லையில் மருதாணிப்பூக்கள்
முல்லையின் வெள்ளை புள்ளிகள்
கொத்தாய் சம்பங்கி மலர்கள்
வெடித்த சோளமாய் மல்லிகை
கிறக்கம் பிறக்குது வீட்டினுள்.

4.இடி மேளம் தட்ட
காற்று நாயனம் ஊத
மின்னல் ஒளி அமைக்க
கானமாய் மழை கொட்ட
வான மேடையில் கச்சேரி

5.எரியாத விளக்கு
எழுப்பாத கவிதை
ஈயாத செல்வம்
மணக்காத பெண்மை
இவையெல்லாம் வீணே

6.பாவாடை தாவணி போனது
நிலத்தில் பார்வை போனது
தனிமை பயம் போனது
தாய்மை ஆசை போனது
பெண்மை எங்கே போனது?

7.விடியாத இரவு இல்லை
எட்டாத உயரம் இல்லை
தளராத தேகம் இல்லை
தூங்காத உயிரும் இல்லை
வலிகள் நிரந்தரமில்லை

8.கொட்டும் மழை இரவில்
மின்வெட்டு ஆனதில்
மெழுகுவத்தி ஒளியில்
பைசாச நிழல்களில்
திகில் கூட இனிக்கிறதே

9.காதோரம் வெள்ளைக் கோடுகள்
வசந்தம் முடிந்த சுவடுகள்
முதலில் லேசாய் அதிர்ச்சி
அப்புறம் கொஞ்சம் மகிழ்ச்சி
அதுதான் அறிவின் முதிர்ச்சி

10.கிணற்றில் நீர் சேந்தவில்லை
குனிந்து நிமிர்ந்து கூட்டவில்லை
ஆட்டவில்லை அரைக்கவில்லை 11.சமைக்கவும், துவைக்கவும், வீடு துடைக்கவும்
சம்பளம் கேட்காத ஆள் வேண்டும்
வம்சம் விளங்க வாரிசு வந்திட வேண்டும்
வீடு, மனை, வாகனம் இலவசமாய் வேண்டும்
“மண்மகன் தேவை” விளம்பரம் வழி காட்டுமே

12.பெண்ணைப் புழுவாய் நினைக்காதே
பூச்சியாய் நினைத்து நசுக்காதே
நச்சாய் வார்த்தை கொட்டாதே
மலிவாய் எடையும் போடாதே
சாது மிரண்டால் காடு கொள்ளாதே

13.கலையாத கனவு இல்லை
குலையாத கோலம் இல்லை
ஏங்காத உள்ளம் இல்லை
இல்லைக்கு எல்லை இல்லை
தெளிந்தால் துன்பம் இல்லை

14.ஆண் வாடை அடிக்காமல்
அவன் அணுவை ஏற்காமல்
அம்மாவாகிடப் போகிறாள்!
விந்தையா? விபரீதமா?
விஞ்ஞான ஆராய்ச்சியே!

15.சித்தி மாமா கிடையாது
தம்பி தங்கை கிடையாது
ஒத்தைப் பிள்ளைதானடா
ஒட்டி உறவாட யாரடா?
நட்பே நாளைய உலகம்

16.அக்னிக் குஞ்சு அவளடா
கணப்பில் சுகம் கண்டிரு
ஊதிப் பெரிதாய் ஆக்காதே
வீணில் எரிந்து சாகாதே
சாம்பலாகிப் போகாதே

17.பச்சை பசேல் புல்வெளி
காலை நேர பனித்துளி
அண்டம் முழுதும் கொட்டிக்
கிடக்குது கோடி அழகு
ஒவ்வொன்றும் ஓர் கவிதை.


வயதோடு கூடவே எடையும் கூடியதே
“வாயைக்கட்டு வயித்தைக்கட்டு” ஏழை போலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community