காலக்கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் நேரம்
அலையலையாய் மனதில் எத்தனை சந்தேகம்
வானத்தில் தினம் வந்து போகும் சூரியசந்திரர்
நடந்த சுவடேன் தெரிவதில்லை பதியவில்லை
கரையை தொட்ட அலை எத்தனாவது அலை
அதற்கேன் அடையாளமில்லை வயதில்லை
கண்ணுக்கு மாற்றம் தெரியாதிந்நியதியிலே
வரலாற்றுப் பாதையிலே மனிதன் மட்டும்
எறும்பூறிய கல்லாய் காலடிச்சுவட்டினை
அழுந்தப்பதித்ததென்னே காரணமென்னே
ஏற வேண்டும் வாரிசுகள் ஏணியுச்சிக்கு
ஏற்றமிங்கு காண வேண்டும் மனிதகுலம்
ஒழியவேண்டும் மடமையும் சிறுமையும்
ஒழுக்கத்தின் பாதையில் ஒழுக வேண்டும்
சுகமும் சுபிட்சமும் நடுநிலை தராசிலே
ஏழ்மையில்லா நாள் இனி வரும் உலகிலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment