தானாய் யாரும் பிறப்பதில்லை
மெய்யிதுதான் பொய்யில்லை
மெய்யும் மெய்யும் கலந்ததினால்
மெய்யொன்று புதிதாய் உதிக்க
சந்ததி தொடரும் சங்கதியில்
புதிதாய் புரிந்திட யாதுமில்லை
புதிராய் அதிலே ஏதுமில்லை
பொய் வேடம் புனையும் மெய்யொன்று
புதுப்பூ ஒவ்வொன்றும் பூக்கும் போது
புதிதாய் உலகம் பிறந்தது போல்
உவகை உள்ளே ஊறி பொங்குதே
முதல் முறை போன்றே கிறங்குதே
சின்ன சீவனின் சிறு அசைவும் கூட
அலுக்காத அதிசயமாய் ஆவதென்னே
பழசே ஆகாத இப்புதுமையென்னே
சின்னக்கையை ஆட்டி சின்னக்காலை உதைத்து
சின்ன வாயை திறந்து பெரிதாய் அழுதபோது
பிறக்கின்ற பேரின்பத்திற்திங்கு நிகரேது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment