Friday, April 26, 2013

மின்னஞ்சல்

IndiBlogger - The Indian Blogger Community சேர்ந்திடுவேன் நொடியில் நான்
காற்றினும் கடிதாய் விரைந்து
மசியில் எழுதி பசையால் ஒட்டி
முத்திரை இட்டு ஊர்தியில் ஊர்ந்து
கதவைத் தட்டாமல் கையில் பெறாமல்
கணத்தில் கிடைக்கும் மின்னஞ்சல்

பாவி

IndiBlogger - The Indian Blogger Community அஞ்சுவதுண்டோ வெறி பிடித்த காமுகர் வன்புணர
புதிய மலரை பூக்காத மொட்டை காய்ந்த சருகை
பதறுது நெஞ்சம் துடிக்குது உடம்பின் அணு அனைத்தும்
எத்தனை கருடபுராண தண்டனைகள் போன்றவை கேட்டும்
எத்தனை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகள் கேட்டும்
எரிக்கும் கொடிய நரகச் செந்தீயின் வர்ணனை கேட்டும்
பயமறியா பாவிகள் இவரை என்னவெலாம் செய்யலாம்
கொடுக்கும் சித்ரவதையில் நடுங்க வேண்டுமடுத்த பாவி 

Wednesday, April 24, 2013

அடையாளம்

IndiBlogger - The Indian Blogger Community வாழையடி வாழை இன்று 
பழங்கதை ஆகிப்போனது
குழிப்பணியாரமும் அப்பமும்
வழக்கொழிந்து போனபின்
ஒரு இனத்தின் அடையாளம்
என்று எதுவும் மிஞ்சுமோ

Sunday, April 21, 2013

போதை

IndiBlogger - The Indian Blogger Community சுவை சுகம் த்ரில் யாருக்குப் பிடிக்காது
பல்லும் சொல்லும் போனாலும் விடாது
திரையும் நரையும் வந்தாலும் குறையாது
பட்டையும் கொட்டையும் அதை அறுக்காது
நாடி நரம்பை சூடேற்ற காரணிக்கள் பலப்பல
ஐம்புலன் அனுபவிக்க ஆயிரம் இன்பமிருக்க
ஆழ்ந்து ஆராய்ந்து கவனித்துப் பார்க்கையிலே
விடாது மக்கட்சேவை செய்வதும் போதையே

வாடிக்கை

IndiBlogger - The Indian Blogger Communityதன்னுரையை வீரிட்டுத் துவங்கும் குழந்தை அறியாது
தனக்குக் கொடுக்கப்பட்ட மணித்துளிகள் எத்தனையென
முன்னுரையை துவங்கியதும் முடிந்துவிடுமா பேச்சு
அருமையான உச்ச கட்டத்தில் அணைந்துவிடுமா மூச்சு
கொட்டாவிகளை ஏளனப் பார்வைகளைக் சந்திக்கணுமா
வீரனாய் சூரனாய் சாதனையாளனாய் இறுமாந்து திரிந்து
கோபுரத்தைத் தாங்கும் பதுமையாய் தன்னை பாவித்து
இம்மேடையில் முழங்குவதுதானே என்றும் வாடிக்கை

Thursday, April 18, 2013

மிருகம்

IndiBlogger - The Indian Blogger Community மிருகம் ஆக்கும் மனிதனை
என்று அதையும் இதையும்
கோபத்தை போதையை
காரணம் காட்டிக் காட்டி
பேராசையின்றி எளிமையாய்
இனம் காத்து வலிமையாய்
அழகாய் ஒழுங்காய் வாழும்
ஐந்தறிவினத்தை பழிக்காதீர்

Tuesday, April 9, 2013

மறு வாழ்வு

IndiBlogger - The Indian Blogger Community மறுஜன்மம் உண்டு பல பொருட்களுக்கு
மறுசுழற்ச்சி செய்து பயன் நீட்டிப்பு
மண்ணுக்கு போகும் மனித உறுப்பு
மறு வாழ்வு தரட்டும் இன்னொருவருக்கு

Thursday, April 4, 2013

அன்னையின் சாயலில்

IndiBlogger - The Indian Blogger Community சாட்சியாலன் அந்த அருளாளன் மத்தள வயிறன்
கரிமுகன் கணேசன் மூத்த மூஞ்சூறு வாகனன்
குமரிகள் கூடுமிடம் மேடையிட்டு அமர்ந்து
கண் குளிர அரசமர குளிர் நிழலில் தரிசிப்பான்
கல்யாண ஆசை நிறைவேற காத்திருக்கிறான்
கன்னியொருத்தியை அன்னையின் சாயலில் தேடி

Monday, April 1, 2013

பைத்தியக்காரன்

IndiBlogger - The Indian Blogger Community பைத்தியக்காரன் என்றால் பிதற்றுபவன்
பாயைப் பிறாண்டுபவன் பரதேசியாய்
பரட்டைத் தலையுடன் திரியும் பித்தன்
என்றெல்லாம் அடையாளம் வைத்திருந்தேன்
போட்டி பொறாமையின்றி பெருந்தன்மையாய்
திரந்த புத்தகமாய் சூதுவாதின்றி வெகுளியாய்
திரிபவனே பைத்தியக்காரன் இக்கலிகாலத்தில்
காலங்கடந்து நான் பட்டுணர்ந்த உண்மையிது
IndiBlogger - The Indian Blogger Community