Saturday, November 27, 2010

After sixty!

IndiBlogger - The Indian Blogger Community
Let me share my musings on my turning 62 today. I feel at sixty time circle closes and I began travelling back! Yes. This is my second childhood! I can find it true in many revelations: a carefree state of mind, no unnecessary worrying over this and that, increased desire to spend time in playing games(thrilled to find such a vast scope online- my grandchildren initiated me into them!), love for innocent pleasures like sweets, icecreams, snacks etc, pleasure in watching birds and flowers and pure naivety. Grudges are forgotten soon and daily life is becoming filled with very simple joys like enjoying a sudoku or crossword puzzle, watching children playing round, listening to the gentle patter of raindrops and satisfactory outcome of cooking each dish! In spite of childish bouts of ill temper and impulsive behaviour there certainly is a childlike glee in flying hither and thither like a little bird. No specific goals to achieve, no unfilled mission to lose sleep on- in short the yoke of life feels lighter. Is this state of aloofness the 'vanaprastham' spoken of by sages? Whatever it is let life roll on at this same pace and come to a peaceful end!

Wednesday, November 24, 2010

விடுதலை

IndiBlogger - The Indian Blogger Community
வைக்கும் இடத்தில் வைக்கும்
வகையும் வழியும் மறக்கலாமோ
விழ மறுக்கும் காய்ந்த சருகினை
வைத்தனர் முதுமக்கள் தாழிக்குள்
வேண்டும் அந்த விவேகம் நமக்கும்
வருமா அந்த விடுதலை மீண்டும்

Tuesday, November 23, 2010

பால் குக்கர்

IndiBlogger - The Indian Blogger Community
பொங்கிடுதே பாலும் கவனம் சிதறினால்
தீய்ந்த வாடை அபாய மணியாய் அழைக்க
அணைந்த அடுப்பும் வீணாய் போன பாலும்
சவாலாய் வெருட்ட பாலை மறுபடி காய்ச்சி
அடுப்பைக் கழுவி துடைத்து இடுப்பொடியுமே
விசிலடிக்கும் பால் குக்கர் நல்ல மாற்றாகுமே

Sunday, November 21, 2010

நிலவரம்

IndiBlogger - The Indian Blogger Community
மின்னஞ்சலை கற்பனை கூட பண்ணவில்லை
காசிக்கு தொலைபேசி தொடர்பையே அதிசயமாய்
களிப்புடன் யோசித்தான் முண்டாசுக் கவிஞன்
தீர்க்கதரிசியென்கின்றோம் அதில் உண்மையுளதோ

ஐயோ பாவம் அப்பாவி பாரதி அவனுந்தான்
மனதில் எதை நினைத்தானோ ஏன் சொன்னானோ
அச்சமும் நாணமும் பெண்டிர்க்கு வேண்டாமென்று
பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனதே

முட்டிக்கு மேலே குட்டை பாவாடை
தோள்பட்டைக்கு கீழே மேலாடை
வளை தொலைத்து மூளியாய் கைகள்
வெறிச்சென்ற பொட்டில்லா பாழ் நெற்றிகள்

பிடரி மயிர் சிலுப்பும் காட்டுக் குதிரைகள்
பிறன் மனை நோக்கும் சிவந்த சேல் விழிகள்
கடிவாளம் போட்டிட வேண்டாமிவர்க்கு
கட்டுப்பாடென்பது வேம்பாய் போனதின்று

ஆணைப் போல் அவளும் இங்கே சிரைக்கிறாள்
வாகனமோட்டி சாலைகளில் விரைந்து பறக்கிறாள்
இச்சைகளின் பின் சென்றிழிந்து கொண்டிருக்கிறாள்
இலக்கணம் புதிதாய் எழுதிடத் துவங்குகிறாள்

கைப்பாவையாய் கைதியாய் இருந்தவள் கையில்
விளையாட்டுப் பொம்மையாகின்றான் ஆடவனின்று
பழி வாங்கும் படலம் துவங்கிவிட்டதோ
பாட்டன் பூட்டன் பாவம் பேரன் மேலோ

மேளதாளத்தோடு உறவுசனத்தோடு சென்று
மணமகன் பரிசம் போடுவான் விமரிசையாய்
மறுநாள் அவனை அழைத்து நீயாய் விலகிவிடு
எனக்கொரு காதலன் இருக்கின்றான் என்பாள்

அவளை நல்லவளாக்குகிறாள் இன்னொருத்தி
ஆண்பாவத்திற்கு அஞ்சாத அஞ்சன விழியாள்
மணவறை வரை அழைத்து வந்து மாலை சூடி
பள்ளியறையில் அவனுக்கு பெப்பே காட்டுகிறாள்

மாற்றானை மனதில் வரித்தவள்
விடுதலை தந்துவிடு என்கிறாள்
விலையாய் லட்சங்கள் கேட்கிறாள்
பாதகி இவளோ கொல்லிப்பாவை

அவளைப் பெற்றவளோ பெரும் பாதகி
பரப்புவாள் சேதி ஆண்மையில்லையென
சட்டமும் சுற்றமும் சாதகமாகிவிட
சதிராடும் அரக்கிகளை கண்டோமே

முட்டையிட வெறுக்கும் இக்கோழிகள்
பதறாது பகல் கொள்ளை அடிக்கையிலே
ஒன்றின் பின் போடும் முட்டைகள் ஏராளம்
மனத்துணிவில் துணி துறத்தலில் தாராளம்

இல்லத்தரசி பட்டம் வேண்டாமடா
இல்லிலிருந்து நீயே இனி நடத்தடா
புதிய வேடம் ஏற்க பொறுப்பாய் வாடா
உன் பால் மனம் எனக்கு வசதியடா

பகலில் உழைத்த களைப்பைக் களைய
இரவில் பப்பில் களித்து வருவேனடா
விசையுறும் பந்தாய் நான் ஆனேனடா
வெளியூரும் வெளிநாடும் அழைக்குதடா

விரல் நுனியில் உலகை ஆள்வேனடா
வேண்டிய சுகமெல்லாம் காண்பேனடா
என் வழி தனி வழியென உணர்வாயடா
தலையிட்டால் உன் தலை இருக்காதடா

கண்ணும் காதும் கூச வேண்டாம்
பார்த்துக் கேட்டுப் பதற வேண்டாம்
மடிந்து போகட்டும் பழைய மகிமைகள்
மரத்துப்போகட்டும் மனித உணர்வுகள்

இன்றைய உண்மை நிலவரம் இதுதானே
ஊடகங்களதை உரக்கச் சொல்கின்றனவே
விளக்கின்று கொடிய விலங்கானது
நாடும் திக்குத்தெரியாக் காடானது

மன்றத்தில் வீச மறந்த தென்றலும்
கூட்டில் கூவ மறுத்த குயிலும்
இயற்கை விதி தாண்டிய விளைவுகளே
இதனால் கதி கலங்கும் பூலோகமே

Sunday, November 14, 2010

தவறன்றோ

IndiBlogger - The Indian Blogger Community
தவறன்றோ மேற்கில் சூரிய உதயம் தேடல்
கருத்த பாறாங்கல்லில் நார் உரிக்க எண்ணுதல்
வஞ்சகர் நெஞ்சில் ஈரம் சுரக்கக் காத்திருத்தல்
தீர்வுகள் காலத்தே வருமென நம்பாதிருத்தல்

Friday, November 12, 2010

பெண்

IndiBlogger - The Indian Blogger Community
பயனில்லா ஓட்டம்
பொருளில்லா ஆட்டம்
இங்கிருந்து அங்கே
அங்கிருந்து இங்கே
மாற்றி மாற்றி உதைக்க
மைதானம் முழுக்க ஓடி
களைக்கும் பந்தல்ல பெண்
பந்தயத்தில் வெல்லவோர்
பகடைக்காயுமல்ல அவள்
வாசலில் கிடக்குமோர்
மிதியடியுமல்ல அவள்
தன்னைத் தேய்த்து மணக்கும்
சந்தனந்தான் ஆனாலும்
தன்னை எரித்து ஒளியாகும்
மெழுகுவத்தியேயானாலும்
தகதக்கும் தங்கத் தகமை
தன்னிகரில்லாத தாய்மை
கொண்டவளை குலவிளக்கை
கொண்டாடுவாயா பந்தாடுவாயா
கொக்கரிக்கும் மூட ஆணினமே

Monday, November 8, 2010

கோகுலம்

IndiBlogger - The Indian Blogger Community
எங்குண்டு நல்ல குதூகலம்
கண்ணனின் கோகுலம் எது
களியாட்டங்களின் களம்
குழந்தைகள் வாழுமிடமது

Sunday, November 7, 2010

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
தெரியுமோ சொர்க்கம் லேசாய்
தூறல் தொடர்ந்து கேட்கையில்
இதமான இனிய நினைவுகளில்
சுகமாய் போர்த்திய போர்வைக்குள்

Wednesday, November 3, 2010

காண்பீர்

IndiBlogger - The Indian Blogger Community
காண்பீர் தெளிவாய்
உமது முகத்தை
உலகக் கண்ணாடியில்
உணர்வீர் உண்மையை

காண்பீர்

IndiBlogger - The Indian Blogger Community
காண்பீர் தெளிவாய்
உமது முகத்தை
உலகக் கண்ணாடியில்
உணர்வீர் உண்மையை

Tuesday, November 2, 2010

அன்னையரே

IndiBlogger - The Indian Blogger Community
படைப்பீர் அறுசுவை உணவு
பலகார வகைகள் ஒரு நூறு
பரிமாறும் பாங்கும் ஓர் அழகு
பாலகரை வளர்க்கும் அன்னையரே
பாசமெனும் நெய் விட்ட விளக்காய்
பரிமளிக்கச் செய்தீரே உயிரையூட்டி
பரவசமாய் பல்சுவை கதை சொல்லி
பகலவனாய் பலவானாய் திருமகவை
பிரகாசிக்க வைக்கும் வித்தகரே
பல கோடி தீபங்களாய் ஒளிருங்கள்

Monday, November 1, 2010

சுகமே

IndiBlogger - The Indian Blogger Community
தொலைகின்றன அலுப்பும் அசதியும்
பின்னணி இசையாய் சாரல் கேட்க
மெல்ல உறக்கம் இமைகளை அழுத்த
கண்விழிக்கும் காலை மெத்த சுகமே
IndiBlogger - The Indian Blogger Community