மின்னஞ்சலை கற்பனை கூட பண்ணவில்லை
காசிக்கு தொலைபேசி தொடர்பையே அதிசயமாய்
களிப்புடன் யோசித்தான் முண்டாசுக் கவிஞன்
தீர்க்கதரிசியென்கின்றோம் அதில் உண்மையுளதோ
ஐயோ பாவம் அப்பாவி பாரதி அவனுந்தான்
மனதில் எதை நினைத்தானோ ஏன் சொன்னானோ
அச்சமும் நாணமும் பெண்டிர்க்கு வேண்டாமென்று
பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனதே
முட்டிக்கு மேலே குட்டை பாவாடை
தோள்பட்டைக்கு கீழே மேலாடை
வளை தொலைத்து மூளியாய் கைகள்
வெறிச்சென்ற பொட்டில்லா பாழ் நெற்றிகள்
பிடரி மயிர் சிலுப்பும் காட்டுக் குதிரைகள்
பிறன் மனை நோக்கும் சிவந்த சேல் விழிகள்
கடிவாளம் போட்டிட வேண்டாமிவர்க்கு
கட்டுப்பாடென்பது வேம்பாய் போனதின்று
ஆணைப் போல் அவளும் இங்கே சிரைக்கிறாள்
வாகனமோட்டி சாலைகளில் விரைந்து பறக்கிறாள்
இச்சைகளின் பின் சென்றிழிந்து கொண்டிருக்கிறாள்
இலக்கணம் புதிதாய் எழுதிடத் துவங்குகிறாள்
கைப்பாவையாய் கைதியாய் இருந்தவள் கையில்
விளையாட்டுப் பொம்மையாகின்றான் ஆடவனின்று
பழி வாங்கும் படலம் துவங்கிவிட்டதோ
பாட்டன் பூட்டன் பாவம் பேரன் மேலோ
மேளதாளத்தோடு உறவுசனத்தோடு சென்று
மணமகன் பரிசம் போடுவான் விமரிசையாய்
மறுநாள் அவனை அழைத்து நீயாய் விலகிவிடு
எனக்கொரு காதலன் இருக்கின்றான் என்பாள்
அவளை நல்லவளாக்குகிறாள் இன்னொருத்தி
ஆண்பாவத்திற்கு அஞ்சாத அஞ்சன விழியாள்
மணவறை வரை அழைத்து வந்து மாலை சூடி
பள்ளியறையில் அவனுக்கு பெப்பே காட்டுகிறாள்
மாற்றானை மனதில் வரித்தவள்
விடுதலை தந்துவிடு என்கிறாள்
விலையாய் லட்சங்கள் கேட்கிறாள்
பாதகி இவளோ கொல்லிப்பாவை
அவளைப் பெற்றவளோ பெரும் பாதகி
பரப்புவாள் சேதி ஆண்மையில்லையென
சட்டமும் சுற்றமும் சாதகமாகிவிட
சதிராடும் அரக்கிகளை கண்டோமே
முட்டையிட வெறுக்கும் இக்கோழிகள்
பதறாது பகல் கொள்ளை அடிக்கையிலே
ஒன்றின் பின் போடும் முட்டைகள் ஏராளம்
மனத்துணிவில் துணி துறத்தலில் தாராளம்
இல்லத்தரசி பட்டம் வேண்டாமடா
இல்லிலிருந்து நீயே இனி நடத்தடா
புதிய வேடம் ஏற்க பொறுப்பாய் வாடா
உன் பால் மனம் எனக்கு வசதியடா
பகலில் உழைத்த களைப்பைக் களைய
இரவில் பப்பில் களித்து வருவேனடா
விசையுறும் பந்தாய் நான் ஆனேனடா
வெளியூரும் வெளிநாடும் அழைக்குதடா
விரல் நுனியில் உலகை ஆள்வேனடா
வேண்டிய சுகமெல்லாம் காண்பேனடா
என் வழி தனி வழியென உணர்வாயடா
தலையிட்டால் உன் தலை இருக்காதடா
கண்ணும் காதும் கூச வேண்டாம்
பார்த்துக் கேட்டுப் பதற வேண்டாம்
மடிந்து போகட்டும் பழைய மகிமைகள்
மரத்துப்போகட்டும் மனித உணர்வுகள்
இன்றைய உண்மை நிலவரம் இதுதானே
ஊடகங்களதை உரக்கச் சொல்கின்றனவே
விளக்கின்று கொடிய விலங்கானது
நாடும் திக்குத்தெரியாக் காடானது
மன்றத்தில் வீச மறந்த தென்றலும்
கூட்டில் கூவ மறுத்த குயிலும்
இயற்கை விதி தாண்டிய விளைவுகளே
இதனால் கதி கலங்கும் பூலோகமே
No comments:
Post a Comment