Sunday, March 21, 2010

நற்செயல்கள்

நிலையாய் நிற்கும் நன்னெறிகள்
நிலையாது சுற்றும் உலகினை
நிலைக்கச் செய்யும் அச்சன்றோ
நற்செயல்கள் நல்ல உரமன்றோ
மனதை பதப்படுத்தும் சுகமல்லவோ
நாளை வரும் நல்ல பலன்கள்
நம்பி நடத்துவோம் நற்பணி
தீங்கனியாம் மாங்கனியை
தின்றபின் கொட்டையை
கொல்லையிலே குழி தோண்டி
கிழவன் சிரமப்பட்டு விதைக்க
பார்த்திருந்தவன் ஏளனமாய்
கனி பறிக்க இருப்பாயாயென்று
கேட்டிட கிழவன் சொன்னான்
பொறுமையாக தாத்தன் தந்தான்
நான் உண்டேன் நான் தந்தேன்
என் பேரன் உண்பான் என்றே
பாவங்களும் புண்ணியங்களும்
பரம்பரை சொத்தல்லவோ
தந்துவிட்டு போவோம் தக்கதை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community