வசமாக்கினாள் என்னை முழுதுமாய் தன்னிடம்
வசியம் என்னை செய்துவிட்டாள் என்றைக்கோ
இருப்புக்கொள்ளாமல் நானிங்கு தவிக்கிறேன்
இனிய இம்சைப் படுகிறேன் படுக்கையறையில்
இரவும் வந்து வெகு நேரமானது அப்பொழுதே
இல்லாள் என்னருகே வரத்தான் ஏன் தாமதமே
பாசாங்கவள் செய்கிறாள் பறந்து திரிகிறாள்
எதையோ எடுக்க வைக்க உள்ளே வருகிறாள்
அடுத்த நொடியே விரைந்து வெளியே ஓடுகிறாள்
கள்ளிக்கு கைவைந்தது இந்த சாகச காரியம்
முள்ளின் மேல் என்னை கிடத்திடும் நாடகம்
சாக்கு போக்கு தானே நன்கு சொல்கிறாள்
கைக்கு எட்டாமல் இப்படியேன் கொல்கிறாள்
மல்லிகை மணத்தை விட்டுச் செல்கிறாள்
மஞ்சத்தில் எனை பாராமல் போகிறாள்
தேவதையவள் அங்குமிங்கும் நடக்கிறாள்
தேய்ந்து நெருங்கி கொலுசொலி கேட்கிறது
காத்துக் காத்து தவிக்கிறேன் தாபத்திலே
வெட்டியென்ன முறிக்கிறாள் இந்நேரத்திலே
அப்பாடா வந்தேவிட்டாள் என்னருகிலே
அணைக்கிறேன் தொலைகாட்சியையும்
காத்திருந்து கனிந்த கனிச்சுவையறியாத
காமுகன் "கன்னி"யை தின்னும் காட்சியை
முட்டாள் பெட்டிக்குள் மூடி முழுகினேனே
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment