நானும் நீயும் போட்டியிட்டோம்
நாளும் கிழமையும் தொடர்ந்து
நடுப்பகலில் சளைக்காமல்
நள்ளிரவில் தலை சாய்க்காமல்
நாகமும் சாரையுமாய் சீறினோம்
நகமும் சதையுமாய் சேர்ந்தோம்
வடக்கும் தெற்குமாய் வாழ்ந்தோம்
காந்தத் துருவங்களாய் ஈர்த்தோம்
களைக்காமல் போரிட்டோம்
களிப்போடு கை கோர்த்தோம்
ஆண்டுகள் இத்தனை உருண்டு
அனுபவங்கள் பற்பல கண்டு
நம் நன்மக்கள் பார்வையில்
துவைதம் தொலைத்து
அத்வைதம் விளக்கி
அம்மையப்பர் ஆனோமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment