இருக்கும் இடம் அறியாரே அலைகின்றார்
இன்பம் இருக்குமிடம் அவரவர் கொல்லையிலே
குலைகுலையாய் காய்த்திருக்கு கனிந்திருக்கு
குதூகலம் அங்கே குளிர்ச்சியாய் நிறைந்திருக்கு
வேப்பம்பூமணமாய் மகிழம்பூமணமாய் காற்றிலே
வேறு யார் வேண்டும் உயிர் கலந்த உறவைத்தவிர
சொந்தமும் பந்தமும் சுமக்க இரு தோளிருக்க
சொர்க்கம் போலொரு சுகம் அங்கு நிரந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment