Thursday, March 18, 2010

திரவியம்

சிலையா இது சிலையா
ச்லைதான் பொற்சிலைதான்
கொல்லன் கைபடாத சிலை
கொஞ்சும் அழகு பொங்கு சிலை

பூவா இது பூவா
பூதான் புத்தம்புது பூதான்
மண்ணில் விளையாத பூ
மயக்கும் சிரிப்புடை பூ

தேனா இது தேனா
தேனேதான் இது தேனேதான்
மலரின் மடியறியா தேன்
மனமினிக்கும் நறுந்தேன்

திரவியமா இது திரவியமா
திரவியந்தான் தேவலோக திரவியந்தான்
தேடக்கிடைக்காத திரவியம்
தொட்டிலில் கண்ட திரவியம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community