Saturday, March 20, 2010

சொர்க்கம்

சொர்க்கம் எந்தத் திசையில் இருக்கிறது
உலக வரைபடத்தில் இருக்கிறதா
கண்டவர் விண்டதுண்டா திரும்பா தேசமா
நன்னெறி நடக்க நல்லவர் முன்னாளில்
சொன்ன ஆசை வார்த்தையா ஆறுதலா
கற்பனை உலகெனில் கவிஞர் அறிவாரே
படைப்பவர் யாவரும் அனுபவிப்பாரே
குழலும் யாழும் அதை மிஞ்சிய மழலை
சூழ்ந்த பயம் வேதனை நீங்கிய விடுதலை
ஐம்புலனில் தனியாய் மொத்தமாய் சுகம்
அதிலும் எத்தனையெத்தனை விதம்
ஆளுக்கு ஆள் மாறும் கிடைக்குமிடம்
அகராதியில் பொருள் உணர்த்தாத இடம்
தேடத் தேவையில்லாத கைப்பொருள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community