விடை பெற துடிக்கிறார்,
வேளை வரவில்லை-
தோலும் சுருங்கி
பல் விழுந்து
பார்வை மங்கி
காது கேளாது
நடை இல்லாது
மார்பு கூட்டில்
மூச்சை நிறுத்தி
நாட்கணக்காய்
மாதக்கணக்காய்
வருடக்கணக்காய்-
எதற்காக இந்த அவதி?
முன்னேற்றம் கண்டு
ஆயுளை நீட்டித்தது தவறோ?
வத்தலான உயிர்களை
அடைக்க முதுமக்கள் தாழி
என்றொரு ஏற்பாடு
முன்னாளில் இருந்ததை
ஏனோ மனம் நினைக்கிறதே!
உடலை பிரிய மறுக்கும்
உயிரின் புனிதம் எங்கே?
இறக்கத் துடிப்பவர்க்கு,
பார்த்துத் தவிப்பவர்க்கு
விடுதலை தருதல் கருணையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment