நாளுக்காக காத்திருக்கிறோம்,
நாட்காட்டி தாள்களை பாத்திருக்கிறோம்,
உருவான கரு வளர்ந்து உலகிற்கு வரும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
பேருக்குப் பின் இரண்டெழுத்து போட முடியும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
காலை ஊன்றி நிமிர்ந்து நிற்கும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
நல்ல துணையுடன் வாழ்க்கை பயணம் தொடங்கும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
கடமைகள் ஒவ்வொன்றும் முடியும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
காலத்தின் மடியில் கண்ணயரும்
நாளுக்காக காத்திருக்கிறோம்-
எத்தனை எத்தனை சிகப்பு நாட்கள்,
மனிதன் வாழ்வில் மிக முக்கிய நாட்கள்,
ஆசையை, எதிபார்ப்பை கூட்டும் நாட்கள்,
கூட்டி, கழித்து மிகச் சரியாகவே
முடியுமே வாழ்க்கையெனும் கணக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment