பாதம் பார்த்து நடந்தாள் பதவிசாக
முட்டவில்லை மோதவில்லை யார் மீதும்
தலை நிமிர்ந்து நடக்கிறாள் நம்பிக்கையோடு
தலை குனிவை தடுக்க உத்தரவாதமில்லை
பாதம் பார்த்தவன் பரிசம் போட்டதறிந்தான் அன்று
பார்க்கும் கண்ணுக்கு பொருட்டில்லை பிறன்மனை இன்று
சமைத்த முறை சரியில்லையோ சுவை இல்லையே
மறுபடியும் முயற்ச்சிப்போம் மணக்கும் ருசிக்காக
Thursday, March 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment