படுத்துகிறது பெண்ணின் புன்னகை
பலபொருள் கொண்ட அப்பொன்னகை
படமாய் நிற்கும் மோனா லீஸாவாய்
பாடமாய் புன்னகையை புகட்டும்
சித்திரப்பாவையர் உள்கிடக்கை
என்னவென்று என்றைக்கும் மர்மமே
அபாயமான அமைதி ஆழ்கடலில்
முத்தும் பவளமும் சுறாவும் திமிங்கலமும்
சிறு மீனும் ஆமையும் எண்ணிலடங்கா
உயிர்களங்கே உயிர்த்துக்கிடக்க
மேற்பரப்பில் சிற்றலைகள் சலசலக்கும்
எரிமலையை மூடிவைத்த ஒரு புன்னகை
எச்சரிக்கை விடுகின்ற மறு புன்னகை
ஏளனமாய் வன்மமாய் ஆவலாய் காதலாய்
கபடமாய் கள்ளமாய் வெள்ளையாய்
பெண்ணின் புன்னகையை சரியாய்
படிக்கத் தெரிந்த பாக்கியவான் யாரோ
காமிராவின் முன் வெளிச்சமாக சிரிக்கும்
வெறும் சிரிப்பில் வசீகரமென்ன கண்டீர்
சவாலாய் ஈர்க்கும் பெண்மை இருக்க
சந்திக்கு வந்த சரக்கின் மேல் ஈக்கள்
தூண்டிலில் வலிய மாட்டும் மீன்கள்
விரித்த வலையில் விரும்பி வீழும் மான்கள்
விபரீத துணிச்சலில் இன்று பெண்கள்
வீம்பில் தொலையுது தாய்மை தகைமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment