காதா கண்ணா இரண்டிரண்டு
கேட்டிடு பார்த்திடு இருமடங்கு
காலா கையா இரண்டிரண்டு
கொடுத்திடு உழைத்திடு குறைவின்றி
வாயா அது ஒன்றே ஒன்று
அளவோடு உண்ணு பேசு
மூக்கு அதுவும் ஒன்று
நுழைக்காதே தேவைவயின்றி
மனம் ஒன்றாக இருக்கட்டும்
பல கருத்தையும் வரவேற்று
அமைதியும் உறுதியம் கொண்டு
தர்மம் சூதெனும் கிரகணத்தின்
வாய் சென்று வெளியேறும்
மங்காத ஒளியோடு தப்பாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment