வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
ஆயினும் நுணலும் தன் வாயால் கெடும்
தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு
வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி பிழைப்பதும்
தாயை சேயை உறவை வாழவைக்கத்தானே
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதில்லை
செவிக்குணவு இல்லாத போது மட்டும்
வாய்க்கு மெல்லும் வேலை தரவேண்டுமாம்
வாயை மூடிக்கொண்டிருந்தால் கலகமில்லை
வாரம் ஒர் நாள் நாளில் சில மணித்துளி
மௌனம் காத்தனர் மகாத்மாக்கள்
வாயை காத்து வளமாய் வாழ்வோமாக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment