Thursday, March 18, 2010

மதுரையம்பதி

திகழ்கிறது தமிழ் மணம் திரும்பிய திசையெங்கும்
போட்டிக்கு வருமே மொட்டவிழும் மல்லிமணம்
திருவிழா கோலந்தான் தினந்தோறும் தெருவிலே
தென்பாண்டி தென்றலோ தெளிந்த தேன் போலே
நகரத்தின் நண்டு சிண்டுக்கும் நக்கல் வரும்
நயமான சொல்வித்தை நடுங்காத நெஞ்சுறுதி
முத்திரைதான் பலவுண்டு பங்கய மலரழகோடு
பண்பு பழகு மாந்தர் வாழ் மதுரையம்பதியிலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community