பிள்ளை உள்ளம் வெள்ளை,
கள்ளம் அதிலே இல்லை.
ஒன்றும் தெரியாத சூன்யம்,
பார்க்கும் அனைத்தும் ரம்யம்,
பேதமில்லை, பிரிவில்லை,
எல்லாம் இன்பமயம்.
அறிவை அது வளர்த்தது,
நல்லது கெட்டது தெரிந்தது.
யோசனை அதிகம் செய்தது,
ஏன் என்றே கேட்டது,
தான் மட்டும் பிடித்தது,
நிம்மதி தூரம் போனது.
கற்றதனால் கலக்கமா?
அறிவேதான் பாவமா?
அஞ்ஞானம் திரும்புமா?
ஆனந்தம் கிடைக்குமா?
இது என்ன முரண்பாடு?
இதுவோ ஈசன் ஏற்பாடு?
முக்தியை அடையும் கவலை-
மூடராய், பித்தராய் ஆன நிலை.
மனதின் கறைகள் கறைந்து ஓட,
மீண்டும் மழலை பருவம் தேட,
தொடங்கிய வட்டம் முடிந்ததோ?
தொலைந்த சொர்க்கம் மீண்டதோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment