மனம் ஆகிடும் சொர்க்கமோ நரகமோ
மெல்லிய கோடுதானதை பிரிக்குமோ
மலர்களங்கு பூக்குமோ மணக்குமோ
முட்கள் மண்டி புதராய் கிடக்குமோ
மந்தமாருதம் தவழ்ந்து கொஞ்சுமோ
மின்னல் இடியோடு புயலடிக்குமோ
மாலைமதியின் மந்தகாசமிருக்குமோ
மருகி வேகும் பாலையாயிருக்குமோ
மறுமலர்ச்சி கொண்டுவர முயலுமோ
மடமையில் மூழ்கித்தான் கிடக்குமோ
மரியாதை மதிப்பென்று உயருமோ
மமதையில் அழுந்திக் கிடந்திடுமோ
மார்க்கம் அறிந்து முக்தியடையுமோ
மூடகத்தில் முடங்கிப் போகுமோ
மல்லி முல்லை பூத்த நந்தவனமாய்
மனிதராய் பிறந்தோர் மாற்றுவோம்
மாக்களலல்ல மாண்புடை பிறவிகள்
மறவாதிதை மரபாகக் கொள்வோமே
Subscribe to:
Post Comments (Atom)
ohhhhhwowwwww!! super writing on manam.....ellaa vitha manangalukum azhagaana arivuraigal aLLi thanthu irukeenga....thank u nga pp
ReplyDeleteVery heartening to have found an eager, discerning reader for my writings! Please continue your favour, suvai!
ReplyDelete