வெள்ள நிவாரணமாய் அகதிகட்கு வழங்குவர்
அவசரகோலத்தில் கிளறிய ஓர் களி உணவு
அது போல் உள்ளதென்றிடுவார் துணைவர்
திடீர் பொடியில் உருவான புளியோதரையை-
காயம் மணக்க பூண்டு மிதக்க
கடுகு உளுந்து கடலைப்பருப்புடன்
தாளித்த வத்தலும் கறிவேப்பிலையும்
நல்லெண்ணெய்யில் நீந்த பாங்காக
புளிக்காய்ச்சலை பதமாய் சமைத்து
நாவின் சுவையரும்பை ஒரு தடத்தில்
பதித்திட்ட மாமியாரின் பாதையினின்று
பிறழ நினைத்தால் நிகழும் பிரளயமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment