அல்லும் பகலும் தூங்காதிருக்கும்,
ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும்,
இண்டு இடுக்கிலும் நீக்கமற நிறையும்,
ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும்,
உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும்,
ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை,
எண்ணங்களின் ஒப்பற்ற வாகனம்,
ஏவல் முடித்திடும் அற்புத பூதம்,
ஐயங்கள் தீர்த்திடும் அதிசய ஆசான்,
ஒலியும் ஒளியும் விருந்திடும் ஊடகம்,
ஓய்வு உழைப்பு இரண்டிற்கும் களம்,
ஔடதமாகும் தனிமைத் துயருக்கு,
அ·றிணை என்றதை எண்ண முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment