அங்கம் மறைத்து அழகை குறைத்து,
ஆணைப் பொலே ஆடை அணிந்து,
ஒசிந்த நடையை ஒரங்கட்டி,
தயங்கும் பாவனை தனையும் மாற்றி,
மென்மை களைந்து விறைப்பை புனைந்து,
சுயமாய் நின்று முனைப்புடன் முயன்று,
அறிவுத்திறன் அனைத்தும் காட்டி,
உயர்ந்த ஊதியம் தனையே ஈட்டி,
சாதனை சிகரம் சடுதியில் எட்டி-
உன்மத்த போட்டியின் முடிவிலே
ஆணுக்கு இணையாய் ஆகிவிட்டாயா,
இறுமாந்து நிற்கும் புதிய பெண்ணே?
அச்சம், நாணம் போன்றவை மறந்து,
ஈவு, இரக்கம், நளினம் குறைந்து,
கடின இனமாய்-ஆணாய்- மாறி,
பெண்மை தகைமை இழந்ததன்றி
பேறென பெரிதாய் பெற்றதென்ன?
வேறென உன் களமென்றறியாமல்
வீம்பில் வீணாய் விரயமானாய்.
வீரமுண்டு, வெற்றியுண்டு,
தாயே உனக்கு தனியிடமுண்டு.
தன்மை இழந்து போகாதே,
தனை மறந்து தணலில் வெந்து
தப்பான இலக்கை தேடாதே,
பெண்மை பொலிவை புதைக்காதே,
பேதையைப் போல வெதும்பாதே
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment