Saturday, March 20, 2010

தகவல் தொடர்பு

தொலைந்து போனானோ
தோளில் மாட்டிய பையிலே
காத தூரம் கடந்து வந்த
கடிதங்கள் சுமந்து வந்து
நடப்பெல்லாம் நண்பனாய்
நல்லபடி சொன்னவன்
மாற்றங்கள் அறிந்திடுவான்
கண்ணாடி இழை தந்த
கண்ணான புரட்சியிலே
கண்ணாலே பாராதோரும்
கணிணி வழி உறவாடுவர்
சோழனும் பிசிராந்தையாரும்
புணர்ச்சிப் பழகா நட்பிலே
முகமறியா பிணைப்பிலே
கட்டுண்டு மகிழ்ந்ததை
பாராமலே வடக்கிருந்து
பரலோகம் சென்றதை
போல ஒரு பந்தமும்
அரங்கேறும் காலமிது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community