பாவிக்கின்றனரே பொது இடங்களை பொறுப்பின்றியே,
குப்பைகளை அதற்கான தொட்டிகளில் போடுவதில்லை,
எந்த இடத்திலும் எச்சில் துப்ப தயங்குவதில்லை,
திறந்த வெளியில் சிறுநீர் கழித்திட கூச்சமில்லை,
சிகரெட் புகையால் சக மனிதர்கள் திணறுவதில்
சிறிதும் அக்கறை காட்டுவதில்லை, நிறுத்துவதில்லை,
பொது இடத்திலே பாட்டின் ஒலியை குறைப்பதில்லை,
முதியோர், குழந்தைகள் யாரும் பொருட்டேயில்லை,
அடுத்தவர் மனநிலை அறிய முயலுதல் முக்கியமில்லை,
இதுவோ அழகு, இதுவோ நாகரிகம்?
நம் சூழலைக் காக்க ஒரே ஒரு நொடி
ஒவ்வொருவரும் தினமும் சிந்திக்க வேண்டும்-
அழகாய் வாழ்வதில் அனைவருக்கும் உண்டு பங்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment