கண்ணால் உன்னை காணாமல்
பிறையாய் தேய்ந்து போனேனே
காதில் உன் மொழி கேளாமல்
உப்பாய் கரைந்து போனேனே
தூது ஒன்றும் கிடைக்காமல்
கற்பூரம் போலாவி ஆனேனே
அருகில் உன்னை இருத்தாமல்
ஆவியை தொலைத்து விட்டேனே
இங்கு அருவமாய் ஆனவளை
வெறுங்கூடாய் போனவளை
தேடி நீ வருவாயோ?
தேவையை அறிவாயோ?
திரும்புமோ என் உயிரும்?
வளருமோ என் உருவும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment