தேன்மலர்கள் காற்றில் ஆடி
அழைத்த வண்டுகள் பாடி
பூப்பூவாய் திகையாமல் ஓடி
பதமான அமுதைத் தேடி
மதுவின் போதையும் கூடி
நகரும் கால்கள் தள்ளாடி
ஒட்டிய மகரந்தப்பொடி
பூவெங்கும் உதிர்த்தபடி
சிலிர்க்குது செடிகொடி
சிறப்பானது அந்த நொடி
பிறக்குது அடுத்த அடி
பிழைக்குது தாவர நாடி
தொடர்கின்ற வாழையடி
இது நுட்பமான சேதியடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment