Saturday, March 20, 2010

அடுக்குமா

தானே நின்றன கால்கள்
முந்தானை பிடித்திழுக்க
மூணுமுடி போட்டவனா
முழு உரிமையேதடா
தாராளமாய் நிறுத்துகிறாய்
மோகனமாய் சிரிக்கிறாய்
அருகிலே அழைக்கிறாய்
அடுக்குமா உன் செயல்
ஆகுமா இத்துணிச்சல்
அடாவடி செய்வாயோ
அழகான சேலையிது
அவரது ஆசைப் பரிசு
முள்ளால் கவ்வுகிறாய்
ஆசை ரோஜாச்செடியே

2 comments:

  1. adadey!!! anbodu vaangi kodutha pudavaiyin vilai mathippilaamaiyai evolo azhagaaa ezhuthi irukeenga awesome....onga anbuku oru periyaaa vanakam nga pp

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community