தனமிருந்தால் மனமுவந்து செய்திடு தானம்
தரணியிதிலே சோர்வின்றி தேடிடு ஞானம்
மோரும் இளநீரும் வேனிலுக்குகந்த பானம்
மௌனத்தில் கசிந்திட காதுக்கினிய கானம்
உருகத்தெரியா கல்மனம் என்றுமோர் ஊனம்
உண்மையில் நாட்டம் தருமே நல்ல நிதானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment