கண்ணீர் சொரியும் வானமே!
கனம் குறைந்த கவலையா?
கருமை கொண்டாய் முகத்திலே
அருமை தெரியா பேதையே!
ஆதவன் பிரிவில் ஏக்கமா?
அதுதான் உனது துக்கமா?
வருவான் விரைவில் வருந்தாதே
தருவான் கடல்நீரை தானமாய்
திருப்பிக்கொடு அதை தரணிக்கு
தயை மிகுந்த எங்கள் தாயே!
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment