விட்டில் பூச்சிகள் விளக்கில் வீழ்ந்து மாயும்,
விடலைகள் அது போலின்று ஆனது பாவம்,
கவர்ந்து இழுக்குது புது நாகரிக மோகம்,
புகை, போதை, காமம், வன்முறை இவையே
இன்று வாழ்க்கைமுறை ஆனது எங்ஙனம்?
முளைத்து மூன்று இலை விடும் முன்னே
முழுதும் திளைத்து பின் அதுவும் புளித்து
நூலறுந்த பட்டமாய் அலைவது என்னே?
திக்குத் தெரியாத காட்டில் திரியும்
திசை மாறிய இந்தப் பறவைகள்
திரும்பிட வேண்டும் திருந்திட வேண்டும்.
விலகாத கிரகணம் உண்டா?
விடியாத இரவும் உண்டா?
நாளை நிச்சயம் நல்ல நாள்.
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment