கதி இதுதான் என்றுன்னை இனி கட்டிப் போடுவாரில்லை
தொட்டிலை ஆட்டி தொல்லுலகை ஆண்ட கைக்காரியே
வண்ண வளையல் குலுங்கும் வனப்பான கைக்காரியே
வக்கணையாய் சமைத்து வசியம் செய்யும் கை(க்)காரியே
நளின விரல்கள் கணிணியில் நடனமாடும் கை(க்)காரியே
இருட்டறையில் இருந்து வெளிப்பட்டதில் கண் கூசியதோ
புதிய சுதந்திரக் காற்று சூறாவளியாகி மூச்சு முட்டுதோ
காய்ந்த சருகாய் இலக்கின்றி சுழட்டி அடிக்குதோ
தளை கழன்ற கால்கள் கல் முள் பாராமல் ஓடுமோ
அர்த்தமுள்ள வேலிகளை உடைத்து உடைந்து போவாயோ
பொருந்தாத வேடமணிந்து பொலிவிழந்து போவாயோ
பொல்லாத ஆண்வர்க்கமென பொய்யாக பாய்வாயோ
போட்டியிலே மெய்யறியாமல் மெய்யை இழப்பாயோ
உலகை தொட்டிலில் ஆட்டும் தாயென்றும் நீயேதானே
தடுமாறி தடம் புரண்டு தகைமையிழந்து தவிக்கலாமோ
ஆற்றங்கரை நாணலின் வேரென உறுதியுடன் நின்றிடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment